Breaking News

ஏரி புனரமைத்தல் பணியினை துவக்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம்  பாப்பாங்குழி ஊராட்சி வடத்தாங்கல் ஏரி புனரமைத்தல் பணியினை மாண்புமிகு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் பாப்பாங்குழி ஊராட்சி வடத்தாங்கல் ஏரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஏரி புனரமைத்தல் பணியினை மாண்புமிகு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று (05.06.2022) துவக்கி வைத்தார்.


75 வது சுதந்திர தின ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.8,87,000/- மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து புனரமைப்பு பணிகள் வடத்தாங்கல் ஏரியில் மேற்கொள்ளப்படவுள்ளது.



இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள மாபெரும் மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

அதனடிப்படையில் இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் பாப்பாங்குழி ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40,800/- மதிப்பீட்டில் மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களால் 100 மரக்கன்றுகள் நடுதல் பணியை துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஸ்ரீதேவி, திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments