இன்டர்நெட் குறைபாட்டால் சி.எம்.ஏ. தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் சென்றதால் பரபரப்பு
சிஎம்ஏ என்ற பட்ட படிப்புக்கான ஆன்லைன் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
இதில் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. காலை, மதியம் என இரண்டு வேலைகளில் தேர்வு எழுத சுமார் 300க்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்தனர்.
காலை முதலே தேர்வு எழுதுபவர்களை உள்ளே அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது குறிப்பாக போதிய கம்ப்யூட்டர்கள் இல்லாததாலும் இன்டர்நெட் வசதி குறைபாட்டாலும் தேர்வுக்கு வந்தவர்களை மையத்திற்குள் அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
மதியம் 2 மணிவரை இண்டர்நெட் சரி செய்யப்படாத காரணத்தால் தேர்வு எழுத வந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போயினர்
இதையடுத்து அனைவரும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மற்றொரு தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இதையடுத்து தேர்வு எழுதுவதற்காக வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
மேலும் பலர் வெளியூர்களிலிருந்து வந்தவர்களும் சோகத்துடன் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments