Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா(எ)சுப்புராயன் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில்  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா(எ)சுப்புராயன்  வேட்பு மனு தாக்கல் செய்தார்.


கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது.



 இதில்  காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.இதனால், இந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. 

 மீண்டும் இந்த வார்டில் தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தேதியை அறிவித்ததை தொடர்ந்து 36வது வார்டில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வேட்பு மனுவை தாக்கல் செயதனர்.

இதில் திமுக சார்பில்    36வது வார்டு வேட்பாளராக சுதா(எ) சுப்புராயன் போட்டியிடுகிறார்.இன்று அதற்கான வேட்புமனுவை காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும்  மேயர் மகாலட்சுமி ஆகியோருடன் வந்து வேட்பாளர் சுதா(எ) சுப்புராயன்  தேர்தல் அதிகாரி கணேஷனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

காலியாக உள்ள இடங்களுக்கு 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 முன்னதாக ,பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் சன்பிராண்ட். கே.ஆறுமுகம்,பொதுகுழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன், துணை மேயர் குமரகுருநாதன், மாமன்ற உறுப்பினர்கள் ,திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments