Breaking News

அக்னிபாத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 அக்னிபாத் திட்டத்தை கண்டித்து காஞ்சிபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய பிஜேபி அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் வனிதா மகேந்திரன். நகர தலைவர் நாதன் மாநில நிர்வாகி பத்மநாபன். மாணவரணி செயலாளர் சரவணன் மாவட்ட இளைஞரணி போகி. மாவட்ட துணைத்தலைவர்கள் அன்பு. மணிகண்டன்.. இந்திராசில்க்ஸ் மோகன். லயன் குப்புசாமி நகர பொதுச்செயலாளர் காஞ்சி காமாராஜ்.. வட்டார காங்கிரஸ் கந்தவேல் .வஜ்ஜிரவேல்..கார்த்தி.புகழேந்தி.ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பிஜேபி அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து பிஜேபி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பிஜேபி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments