அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் சி.டி.ஸ்கேன் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தொடக்கி வைத்தார்
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் 16 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் சி.டி.ஸ்கேன் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மக்கள் பயன்பாட்டிற்க்கு தொடக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக சி.டி.ஸ்கேன் இயந்திரம் இல்லாததால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றவர்கள் மிகவும் சரமைக்குள்ளாகியுள்ள நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலரும்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும்மான சுந்தர் இன்று (27.06.2022)உத்திரமேரூர் மருத்துவமனையில் 16 லட்சம் மதிப்பில் புதிய சி.டி.ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உத்திரமேரூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல்,பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன்,சோழனூர் ஏழுமலை உள்ளிட்ட திமுகவினர் மருத்துவர்கள்,செவிலியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments