Breaking News

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை.. பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காலனி அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.06.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி,  மாணவர்களுக்கான உதவித்தொகை, இலவச உபகரணங்கள், பாட புத்தகங்கள் அனைத்தும் வழங்கி பாதுகாப்பாக மாணவர்கள் இருந்து வரும் சூழ்நிலையில், இதனை பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு செய்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது.



இப்பேரணியில் ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உபகரணங்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு முதல் பருவ பாட புத்தகங்களை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

இப்பேரணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.நடராஜன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments