Breaking News

தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.... பத்ம விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  பத்ம விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

குடியரசு தின விழா அன்று பத்ம விருதினை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.  

இதுகுறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவிக்கையில்,

நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15.09.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறவும்..



மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  

எனவே காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments