"இந்தியா: கடந்த 75 &அடுத்த 25: பள்ளி மாணவர்களின் பார்வையில்” என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகள்
இந்திய நாட்டின் தொன்மையான வரலாறு, கலை வளர்ச்சி மற்றும் சாதனைகளை முன்னிறுத்தி இந்திய அரசாங்கம்,“AZADI KA AMIRT MAHOTSAV” "சுதந்திரத் திருநாள் அமுதத் திருவிழா " என்ற நிகழ்ச்சியை 75 வருட சுதந்திர தினம் கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது.
இதை முன்னிட்டு, வருமான வரித்துறை, வருமானவரி ஆணையர் (விலக்கு), தமிழ்நாடு&புதுச்சேரி,“AZADI KA AMIRT MAHOTSAV” " சுதந்திரத் திருநாள் அமுதத் திருவிழா" நிகழ்ச்சியை 17.06.2022 அன்று, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி, வேலூரில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு திருமதி ராஷ்மி சக்சேனா சாஹ்னி, IRS, முதன்மை வருமானவரி தலைமை ஆணையர் (விலக்கு), புது டெல்லி, அவர்கள் தலைமையேற்று பங்கேற்கவுள்ளார்கள். திருமதி ஜஹான்ஸிப் அக்ஹதர், IRS, வருமானவரி தலைமை ஆணையர், சென்னை, கௌரவ விருந்தினராக பங்கேற்கவுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியின் முன்னோடியாக 15.06.2022 அன்று "இந்தியா: கடந்த 75 &அடுத்த 25: பள்ளி மாணவர்களின் பார்வையில்” என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாநகரத்தை சுற்றியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்காக நடைபெறுகிறது.
இந்த 17.06.2022 நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, மரம் என் நண்பன் என்ற முன்னெடுப்பின் கீழ் மாணவர்களே தங்களின் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு அவற்றைத் தத்தெடுத்து பராமரிக்கவும் பசுமை வளாகங்களை ஏற்படுத்தவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இடையே வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்க, புகழ்பெற்ற பேச்சாளர்கள் உரையாற்றுகிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் வருமான வரி துறையினரால் தமிழக அரசுகல்வித்துறையின்உதவியுடன் நடத்தப்படுகிறது.

No comments
Thank you for your comments