காஞ்சிபுரத்தில் களைகட்டிய திமுக உட்கட்சித் ஓன்றிய தேர்தல்
காஞ்சிபுரம் ஜூன் 28-
காஞ்சிபுரத்தில் களைகட்டிய திமுக உட்கட்சித் ஓன்றிய தேர்தல். ஆதரவாளர்களோடு கூட்டமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுகவினர்..
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் 15-ஆவது உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற துவங்கி உள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், சாலவாக்கம், வாலாஜாபாத் வடக்கு,தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு,லத்தூர் வடக்கு, தெற்கு, திருக்கழுக்குன்றம் தெற்கு, மதுராந்தகம் வடக்கு, தெற்கு, சித்தாமூர் கிழக்கு, மேற்கு, அச்சரப்பாக்கம் வடக்கு, தெற்கு, ஒன்றியங்களில்ஓன்றிய நிர்வாகிகள் பதவிக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
ஒன்றிய நிர்வாகிகள் பதவிக்கான வேட்புமனுக்கள் பெறும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் பவள விழா மாளிகையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தேர்தல் ஆணையாளராக அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவனிடம் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் ஒன்றிய நிர்வாகிகள் பதவிக்கு வேட்பாளர்களாக போட்டியிடும் திமுகவினர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுக்களை வழங்கினார்கள்.உடன் காஞ்சிபுரம் எம்.பி ஜி.செல்வம் காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் ஏழில் அரசன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திமுக உட்கட்சித் தேர்தலை ஒட்டி தேர்தலுக்காக பி. எம். குமார் ஞானசேகரன் சாலவாக்கம் குமார்,பி.சேகர் எம்.எஸ், சுகுமார் , க.குமணன் ,எஸ்பி பூபாலன்,படுநெல்லி பாபு, சோழனூர் ஏழுமலை,பெ.மணி, மற்றும் கே எஸ் ராமச்சந்திரன், சரவணன் , ஜூலியஸ் சீசர், அன்பில் பொன்னா,,பி.எஸ் பாஸ்கர்,கே. சகா தேவன் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments