தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இணைந்து கடன் பெறலாம்... ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தல்
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில்,
30.05.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனாக ரூ.50,000/-, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனாக ரூ.5.50 இலட்சமும், மகளிர் சிறுவணிக கடனாக ரூ.85,000/- மற்றும் ஐந்து விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை உட்பட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் திருமதி.எஸ்.லட்சுமி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு,கோ.சிவ ருத்ரய்யா உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுய உதவிக்குழு கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், நிலவுடமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் அணுகி கடன் மனு அளித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தினை பெற்று உரிய பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளரை 7338720801, காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளரை 7825807641 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments