அனைத்து சிம் கார்டு நிறுவனங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்து சிம் கார்டு நிறுவனங்களை கண்டித்து சாலையில் சிம் கார்டுகளை தூக்கி வீசி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே செல்போன் கடை உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகளாவிய அத்தியாவசிய தேவைகளுக்களுக்குள் ஒன்றானதாக கைபேசி மாற்றியுள்ள நிலையில் இதனை பயன்படுத்தும் வகையில் சிம் கார்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் ஏர்டெல், ஓடாபோன், ஐடியா என பல்வேறு சிம் கார்டு நிறுவனங்கள் தங்களது விற்பனையை கைபேசி கடை சில்லரை விற்பனையாளர்களின் மூலம் செய்து வருகிறது.
இந்நிலையில் அண்மை காலமாக தமிழகத்தில் சிம்கார்டு நிறுவனங்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் முறையற்று சிம் கார்டு விற்பனை மற்றும் அதனை சார்ந்த சேவைகளை தெருயோரங்களில் செய்வதனால் செல்போன் கடை உரிமையாளர்கள் பாதிக்கபடுவதையும், குற்றசெயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையையும் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று செல்போன் கடை உரிமையாளர்கள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெறுகிறது.
அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட கைப்பேசி கடைகள் நலசங்கத்தின் சார்பாக காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே சங்கத்தின் தலைவர் சுரேஷ்ராஜா தலைமையிலும் பொருளாளர் தட்சணாமூர்த்தி முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இதில் ஏராளமான செல்போன் கடைகளின் உரிமையாளர்கள் கலந்துக்கொண்டு சிம்கார்டு நிறுவனங்கள் ஒழுங்கு முறையற்று விற்பனையில் ஈடுபடுவதை கண்டித்தும், இத்தொழிலையே நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வழிமுறையை கண்டித்தும், கண்டன கோசங்களை எழுப்பியும், இவ் விவகாரத்தில் டிராய் தலையிட்டு சிம் கார்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைபடுத்திட வேண்டும் என்ற வேண்டுகோளினை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இவ்வார்பாட்டத்தையொட்டி கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்தும்,இன்று ஒரு நாள் அடையாளமாக சிம் கார்டு விற்பனை செய்யபோவதில்லை என்று சிம்கார்டுகளை சாலையில் தூக்கி வீசி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments