காஞ்சிபுரத்தில் இலவச இருதய பரிசோதனை முகாம்
காஞ்சிபுரம்,ஜூன் 26 -
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை உத்தரமேரூர் எம்.எல்.ஏ.க.சுந்தர் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.தொடக்க விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் நித்யாசுகுமார்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவர் தேவேந்திரன்,திமுக நகர் செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.சி.வி.எம்.பி.எழிலரசன் வரவேற்று பேசினார்.காஞ்சிபுரம் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை,பிராண்டியர் லைப்லைன் மருத்துவமனை,மருத்துவர் கே.எம்.செரியன் அறக்கட்டளை,காஞ்சிபுரம் லைப் கேர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளின் மருத்துவர்கள் குழுவினர் ஒன்றாக இணைந்து இலவச இருதய பரிசோதனைகளும்,மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினார்கள்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம்,ரத்த சர்க்கரை,இருதயபடச்சுருள் எடுத்தல்,செவித்திறன் பரிசோதனை ஆகியன உட்பட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.தொடக்கவிழாவில் மாநகர் மன்ற மண்டலத் தலைவர்கள் எஸ்.சந்துரு,கே.மோகன் ஆகியோர் உட்பட உறுப்பினர்கள்,திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை எம்.எல்.ஏ.எழிலரசன் செய்திருந்தார்.
படவிளக்கம்..காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமை பார்வையிட்ட எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள்
No comments
Thank you for your comments