வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா: 8 ஏவுகணைகள் சோதனை
சியோல் :
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![]() |
File Photo |
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.
இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.
இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று அதிகாலை தென் கொரியாவும் அமெரிக்காவும் தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனைகளை நடத்தினர்.
No comments
Thank you for your comments