காங்கிரஸ் பாத யாத்திரை- கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 2ம் தேதி தொடக்கம்
சென்னை:
- வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்குகிறது. அங்கிருந்து மாவட்டத்தில் 75 கிலோ மீட்டர் தூரம் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் எல்லையான காவல் கிணறு வரை பாத யாத்திரை செல்கிறார்கள்.
- பாதயாத்திரை மூலம் நாடு முழுவதும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நாடு தழுவிய அளவில் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த பாதயாத்திரை ராகுல் காந்தி தலைமையில் அறிவிக்கப்பட்டது. இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்குகிறது. அங்கிருந்து மாவட்டத்தில் 75 கிலோ மீட்டர் தூரம் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் எல்லையான காவல் கிணறு வரை பாத யாத்திரை செல்கிறார்கள்.
அதன்பிறகு திருநெல்வேலி மாவட்ட காங்கிரசார் தொடர்வார்கள். இதே போல் பாத யாத்திரை செல்லும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 75 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்கள். இடம் பற்றிய விபரங்கள் அடங்கிய வரைபடத்துடன் கட்சி தலைமைக்கு அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த பாதயாத்திரையின்போது பா.ஜனதா ஆட்சியின் வகுப்புவாத கொள்கைகளையும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளையும் மக்கள் மத்தியில் விளக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த பாதயாத்திரை மூலம் நாடு முழுவதும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
No comments
Thank you for your comments