ரூ.13.00 இலட்சம் மதிப்பிலான அவசரகால உயிர்காக்கும் மருந்துகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பு
ஈரோடு, ஜூன் 14-
ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.13.00 இலட்சம் மதிப்பிலான அவசரகால உயிர்காக்கும் மருந்துகளை இலங்கை நாட்டின் மக்களுக்கு அனுப்பி வைத்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று (14.06.2022) மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு சென்ட்ரல் ரோட்டரிசங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.13.00 இலட்சம் மதிப்பிலான அவசரகால உயிர்காக்கும் மருந்துகளை இலங்கை நாட்டு மக்களுக்கு அனுப்பி வைத்தார்.
இலங்கைநாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்குள்ள பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஈரோடு சென்ட்ரல் ரோட்டரிசங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.13.00 இலட்சம் மதிப்பிலான அவசரகால உயிர்காக்கும் மருந்துகளை, ஸ்ரீ இலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அனுப்பிவைக்க ஏதுவாக, இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுப்பிவைத்தார். இந்த அவசரகால உயிர் காக்கும் மருந்துகள் இலங்கை மதிப்பில் ரூ.55.00 இலட்சம் ஆகும்.
இந்நிகழ்வில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே.சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட ஆளுநர் மரு.இ.கே.சகாதேவன், ஈரோடு ரோட்டரி சங்க தலைவர் வி.ராஜமாணிக்கம், துணை ஆளுநர் கோதண்டராமன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் தண்டபாணி, விஜயசந்திரன், செயலாளர் பரணிதரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments