Breaking News

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் ஒரு மணி நேரத்தில் கைது

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிரகாஷ் ( 31 ), த /பெ.ராஜேந்திரன், அன்னை பழைய இரும்பு கடை, தர்காமேடு, சந்தவேலூர் என்பவர் 13.06.2022 அன்று 15.40 மணிக்கு தனது டாடா இண்டிகா காரில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ராஜகுளம் வேளாண் கூட்டுறவு அருகே தனது காரை TN 21 BD 9598 Splender Plus வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் வழிமடக்கி, கருங்கற்களால் தனது கார் கண்ணாடியை உடைத்து , காரில் இருந்த என்னை கீழே இறக்கி அடித்து தனது பாக்கெட்டில் இருந்து ரூ.1200/- எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக புகார் அளித்தார். 

இச்சம்பவம் தொடர்பாக துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காஞ்சி தாலுக்கா காவல் நிலையம் மற்றும் கபார் ரோந்து காவலர்களுக்கும் தகவல் தெரிவித்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தினார். 

இது சம்மந்தமாக காஞ்சி தாலுக்கா காவல் நிலைய காவல் ஆளிநர்கள் 

1 ) திரு.தணிகைவேல், த.கா .640 . 

2 ) திரு.விஜய்  தனிப்பிரிவுமு.நி.கா .216

 மற்றும் கப்பார் ரோந்து காவலர்கள் 

3 ) திரு.ஜெகதீசன், காவலர் 408,4 ) திரு.சதீஷ்குமார் . காவலர் 945.

5 ) திரு.பாஸ்கர் . காவலர் 2421.

6).திரு.நாகராஜன், காவலர் 3378 

7 ) திரு.அசோக்பாபு, காவலர் 712 மற்றும் 

8 ) திரு.ரஞ்சித், காவலர் 3321 மற்றும் தமிழ்நாடு சிறப்பு படை காவலர் 

9 ) திரு.சுரேஷ், காவலர் 3199 ஆகியோர் அடங்கிய குழுவினாரால் 

எதிரிகளான 

1) ரவிச்சந்திரன் (21), த / பெ.செல்வராஜ் எண் .61, குட்டைக்கரை தெரு, பெரிய காரை, காஞ்சிபுரம் . 

2) ருத்திரமூர்த்தி (21), த / பெ.ரமேஷ் எண்.121, கமலா தெரு, பெரிய காரை, காஞ்சிபுரம் மற்றும் 

3) ராஜி (21), த பெ.ஆறுமுகம், எண்.189, கம்மால தெரு, பெரிய காரை, காஞ்சிபுரம் ஆகியோர்களை விரைந்து கைது செய்தனர். 

குற்றம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்த குழுவினரை காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. எம்.சத்யபிரியா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டம் எம்.சுதாகர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு வெகுமதி அளித்து அவர்களை வெகுவாகப் பாராட்டினார்கள்.

No comments

Thank you for your comments