குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் 0-6 வயது குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று (13.05.2022) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் 0-6 வயது குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் கடுமையான எடை குறைவு, மெலிவு தன்மை, குள்ள தன்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுகள் பற்றி விவரிக்கப்பட்டது மேலும் ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் திரு.தேவேந்திரன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) திருமதி.பிரியா ராஜ், மாவட்ட திட்ட அலுவலர் (ஒகுவதி) திருமதி.மு.கிருஷ்ணவேணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments