திமுக கவுன்சிலர் மீது கொலைவெறி தாக்குதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது...
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்த நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் வீரா என்கின்ற வீரபத்திரனை கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தி தலை மற்றும் முகங்களில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றனர்.
இந்நிலையில் வீரபத்திரன் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனையில் வீரபத்திரன் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்,
அதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் கச்சிபட்டு பகுதியை சேர்ந்த மிதுன்சக்கரவர்த்தி வயது 35 மற்றும் வெங்காடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் வயது 25 ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் வ/29 மற்றும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பாரத் வ/35 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதன் பிறகு கடந்த 5 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்துரு வ/30 மற்றும் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த தினேஷ் வ/29 பிரபு என்கின்ற பிரபாகரன் வ/30 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த டியோ விக்கி எ விக்னேஷ் என்கிற வாலிபரை ஸ்ரீபெரும்புதூர் போலிசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
No comments
Thank you for your comments