வீடு இல்லா அனைவருக்கும் இலவச குடி மனை பட்டா கேட்டு சிபிஎம் போராட்டம்
காஞ்சிபுரம், மே.06 -
வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச குடி மனை பட்டா வழங்கிட கோரியும், நீண்டகாலமாக புறம்போக்கு நிலத்திலும் வறண்ட நீர்நிலை புறம்போக்கு குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும், கோவில் நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டம் வழங்கிட கோரியும் வெள்ளியன்று (மே 6) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்க்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார், செயற்க்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ், டி.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இருளர் இன மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்குவதாற்க்கு ஆவணம் செய்வதாகவும், கோயில் மனை குடியிருப்பவர்கள் சம்பந்தமாக அரசுக்கு தெரிவிப்பதாகவும், படப்பையில் தற்கொலை செய்துகொண்ட சுப்புலட்சுமி குடும்பத்தாருக்கு நிவாரணம் அளிப்பதற்க்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதற்கு முன்னதாக ரங்கசாமி குளத்திலிருந்து ஊர்வலமாக சென்று காஞ்சிபுரம் மாவட்டச் ஆட்சியர் அருகே காவலன் கேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments
Thank you for your comments