Breaking News

விடுதிகளில் காலியாக உள்ள தூய்மைப்பணியாளர் வேலை வாய்ப்பு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பதவி - பகுதி நேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்)

காலிப்பணியிடம்  -  14

தொகுப்பூதியம் -  ரூ.3000/-  Per Month

இனச்சுழற்சி  (பணியிட எண்ணிக்கை பூர்த்தி செய்யப்பட வேண்டும்)

Priority 

GT-2 

SCA-2

MBC/DNC-2

BCM-2

SC/ST-1

Non - Priority 

GT-3

MBC/DNC-1

BCM-1

மேற்கண்ட பகுதிநேர தூய்மைப்பாணியாளர் (ஆண்/பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சூழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.   தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2.    வயது வரம்பு : 01.07.2022 தேதியில் SC/ST-18 முதல் 35, BC, BCM, MBC & DNC – 18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி தகுதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், கீழ் உள்ள மாதிரி விண்ணப்ப படிவம் போன்று தயார் செய்து அதனை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் 30.05.2022 தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கடந்த 30.05.2019 அன்று மேற்படி பணியிடங்களுக்கு வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தி நிர்வாக காரணங்களால் இதன் மூலம் இரத்து செய்யப்படுகிறது.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments