Breaking News

இன்று கொரோனா - 19 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம்


நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 9,17,874 முதல் தவணையும், 7,21,742 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


இருப்பினும் புதிய வகை கொரோனா வைரசால் XE stain மூலம் மக்களுக்கு கொரோனா காய்ச்சல் வரவாய்ப்பு உள்ளதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 08.05.2022 அன்று சிறப்பு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,118 நடமாடும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்.


வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments