Breaking News

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் ஆட்சியர் ஆர்த்தி

 தமிழ் இணையம் கல்வி கழகம் சார்பில் திருக்குறள் குறளோவியம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

 


தமிழ் இணையம் கல்வி கழகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் குறளோவியம் என்ற தலைப்பில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள பல்லவன் மருந்தியல் கல்லூரி மாணவன ந.சுஜேஷ், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஊ.அஸ்வினி மற்றும் மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி மாணவி ம.வர்ஷினி ஆகியோருக்கு ஊக்கப்பரிசாக ரூ.1000/-ற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்..

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ப.கணேசன் உடனிருந்தார்..


வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments