எழுச்சூர் கிராம மக்கள் வாழ்வாதாரம் கோரி மனு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எழுச்சூர் கிராமத்தில் வசிக்கும் 18 வீடுகள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையறிந்த எழுச்சூர் கிராம மக்கள் எங்கள் வீடுகளை நான்கு தலைமுறைக்கும் மேலாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம் எனவே இப்பகுதி வசிக்கும் நாங்கள் எங்கு செல்வது என்று வழி தெரியாமல் நிற்கதியாக நிற்கின்றோம்.
எனவே அரசு எங்களுக்கு இந்த இடத்தை தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் வேலு அவர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட எழுச்சூர் பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா அவர்களிடம் மனு அளித்தனர்.
மேலும் இம்மனுவெல் சுமார் 50 ஆண்டு காலமாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம் எங்கள் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளிகளில் தான் படித்து வருகிறார்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் இங்கு தான் நாங்கள் வாங்குகிறோம் மற்றும் ஆதார் அட்டை வோட்டர் ஐடி உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்துமே கடந்த நான்கு தலைமுறைகளாக இங்கு தான் எங்களுக்கு உள்ளது.
எனவே எங்களை இப்பகுதியிலிருந்து காலி செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments