அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்த்தி நள்ளிரவில் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்கென உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் தினசரி ஆயிரகணக்கானோர் சகிச்சை பெற்று பயனடைகின்றனர்.இதில் நூற்றுகணக்கானோர் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்றும் வருகின்றனர்.அண்மை நாட்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளுக்கு முறையான சகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என தொடர் புகார்கள் எழுந்து வந்தன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் மா.ஆர்த்தி அவசர சகிச்சை பிரிவு,மகப்பேறு சகிச்சை பிரிவு,பச்சிளம் குழந்தைகள் பிரிவு,இரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு சென்று தீடிர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையை உறுதி செய்த அவர்,உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் மருத்துவர்களிடம் சகிச்சை அளிக்கப்படும் முறைகள்,படுக்கைகள்,மருத்துவ உபகரண தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் நோயாளிகளை கனிவுடன் கவனிக்கவும்,அவர்களுக்கு திருப்திகரமான சகிச்சைகள் மேற்கொள்ளவும்,தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் சகிச்சையை விட ஒரு மடங்கு மேலாக சகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தீடிரென நள்ளிரவில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டதால் மருத்துவர்கள் பதட்டம் அடந்ததோடு,மருத்துவமனை வளாகமே சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
No comments
Thank you for your comments