தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க சார்பில் சிறப்பு மலர் வெளியீடு
மறைந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில செயல் தலைவரும், காஞ்சி அறிஞர் அண்ணா பேரவை தலைவருமான தே.தயாளனின் படத்திறப்பு விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா மாங்காட்டில் நடைபெற்றது.
சென்னை அடுத்த மாங்காடு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற படத்திறப்பு விழாவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில செயல் தலைவர் தே.தயாளனின் திரு உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு, சிறப்பு மலரை நீதியரசர் கே.ஞானப்பிரகாசம் வெளியிட காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன், மாநில சங்க ஆலோசனை குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள தயாளன் வீட்டிற்கு சென்று அவரது திரு உருவப்படத்தை சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரையும் விழாவில் ஆசிரியர் சங்க மாநில தலைவர் இரா. தீனதயாளன் பொதுச்செயலாளர் டி.ஆர். ஜான் வெஸ்லி வரவேற்புரையும், மாநில பொருளாளர் ப.ருக்மாங்கதன் நன்றியுரையாற்றி பேசினர்.
இதில் தலைமை நிலையச்செயலாளர் க.ஜெயராமன், மகளிரணி செயலாளர் ஜெ.ஸ்ரீ ஜெயந்தி உட்பட ஆசிரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
No comments
Thank you for your comments