நீர்தேக்க தொட்டிகளை மாநகராட்சி துணை மேயர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியிலுள்ள பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள நீர்தேக்க தொட்டிகளை மாநகராட்சி துணை மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் கலங்கல் நிறத்தில் வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சியின் துணை மேயருமான குமரகுருநாதனிடம் தெரிவித்தனர்.
இதனையெடுத்து துணை மேயர் குமரகுருநாதன் இது குறித்து நடவடிக்கை எடுத்திட மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் திருகாலிமேடு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அவை சரிசெய்யப்பட்டு பொதுமக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட 1இலட்ச லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு நீர்தேக்க தொட்டிகளை தீடிர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான நீரேற்றுதலையும், குடிநீர் சுத்தமாக உள்ளதையும் உறுதி செய்த அவர் நீர்தேக்க தொட்டி மூடி மூடப்பட்டு சுகாதாரத்துடன் பேணி பாதுகாக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது அப்பகுதியின் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், பொதுமககள் என பலர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments