Breaking News

மாற்றுதிறனாளிகள் கபடி போட்டியில் வென்ற இளைஞருக்கு பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள்...

தேசிய அளவிலான மாற்றுதிறனாளிகள் கபடி போட்டியில் வென்ற தமிழக அணியில் கலந்துகொண்ட காஞ்சிபுரம் இளைஞருக்கு அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்து, பேண்டு வாத்தியம் முழங்க,குத்தாட்டம் போட்டும்,பெண்கள் ஆரத்தி எடுத்தும் ஆரவார வரவேற்பு அளித்தனர்.


தி ஹீலர் அறக்கட்டளை நிறுவனமும் பாராலிம்பிக் கபடி பெடரோஷன் இந்தியா இணைந்து மாற்றுதிறனாளிகளுக்கான 4-வது தேசிய போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த ஏப்ரல் 29,30 தேதிகளில் கால் இறுதி போட்டிகள் நடைபெற்றது.


நீட் விலக்கு தொடர்பாக  நமது போராட்டத்தின் அடுத்த கட்டம் - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்


இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்டிரா, ஹரியானா உள்ளிட்ட 16மாநில அணிகள் கலந்துகொண்டன.

அதனைதொட்ர்ந்து மே 1ஆம் தேதி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆந்திரா, ஹரியானாவையும் தமிழக அணி, மஹாராஷ்டிரா அணியும் வீழ்த்தி இவ்விரு அணியும் இறுதி போட்டிக்கு தேர்வாகின.

இதனையெடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மஹாராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழக அணி 41:29 என்கிற புள்ளி கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையும், 1இலட்ச ரூபாயையும் தட்டியது. மேலும் பதக்கங்களும் வென்றது.

வெற்றி பெற்ற தமிழக அணியில் கலந்துகொண்ட காஞ்சிபுரம் திருப்பதிருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த பி.காம் பட்டதாரி இளைஞர் மோகன் என்கிற அப்பின் சென்னையிலுருந்து நேற்று இரவு காஞ்சிபுரம் திரும்பி அவரது சொந்த ஊரான திருப்பருத்திகுன்றம் பகுதிக்கு வந்தடைந்த அவருக்கு அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்து பேண்டு வாத்தியங்கள் முழங்கவும், இளைஞர்கள் குத்தாட்டம் போட்டும்,சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

No comments

Thank you for your comments