Breaking News

+2 தேர்வு.. ஐயங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு

 காஞ்சிபுரம் மாவட்ட;ம் ஐயங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் +2 தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.


 காஞ்சிபுரம் மாவட்ட;ம் ஐயங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் +2 தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.05.2022) பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கான,  மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று (05.05.2022) தொடங்கி 28.05.2020 அன்று வரை நடைபெறவுள்ளது. +2 பொதுத் தேர்வினை 6516 மாணவர்கள், 7002 மாணவிகள் என மொத்தம் 13518 மாணவ மாணவுகள் எழுதுவுள்ளனர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பொதுத் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 7 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 14 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 50 தேர்வுமையங்களுக்கு 50 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 1 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் , 50 துறை அலுவலர்கள் மற்றும் 6 கூடுதல் துறை அலுவலர்கள், 85 பறக்கும் படை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு தொடங்குவதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் திரு,திருவளர்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments