திமுக கவுன்சிலரை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் :
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருராட்சியின் 11 வது உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீரா என்கிற வீரபத்திரன் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் அருகே வீரபத்திரன் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த மர்ம நபர்கள் சிலர் வீரபத்திரனை சரமாரியாக வெட்டியதில் தலை கை கால் முதுக பகுதியில் பலத்த காயமுற்றார். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலிசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த வீரபத்திரனை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்பு மேல் சிகிச்சைக்காக பூந்தமல்லி அருகே தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அபாய கட்டத்தை தாண்டி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலிசார் குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் கைது செய்யவில்லை என்று வீரபத்திரன் மனைவி மற்றும் உறவினர்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலிசார் பெண்களை சாலையில் இருந்து அப்புறபடுத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுணில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்துடன் இது தொடர்பாக வீரபத்திரன் மனைவியை புகாரளிக்கவும் செய்தார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்காடு கிராமத்தை சேர்ந்த ஆகாஷ், ஸ்ரீபெரும்புதூர் கச்சிபட்டு பகுதியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளி வந்தன.
மிதுன் சக்கரவர்த்தி யும் வீரபத்திரனும் உறவினர்கள் தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தேர்தல் சமயத்தில் தனது உறவினருக்கு துணையாக இருக்காமல் வீரபத்திரன் சுயேட்சையாக போட்டியிட்டதாகவும் போட்டி யிட்டு வெற்றி பெற்ற உடன் வீரபத்திரன் எங்களை கண்டுகொள்ளவில்லை வீரபத்திரன் வளர்ச்சியை எங்களால் சகிக்க முடியவில்லை என்றும் ஆகவே மிதுன் சக்கரவர்த்தி திட்டமிட்டு தனது உறவினர் வீரபத்திரனை கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
மேற்படி 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த போலிசார், மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய நபர்களை தேடி வந்தனர்.
அதன்படி கூலிப்படையை சேர்ந்த விழுப்புரம் மாவட்டம் பொம்பூர் பகுதியை சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன் சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பாரத் ஆகிய இருவரை கைது செய்த போலிசார் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோ வையும் பறிமுதல் செய்தனர்.
பாலமுருகன் மற்றும் பாரத் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
திமுக கவுன்சிலர் வீரபத்திரன் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments
Thank you for your comments