நரிக்குறவ மூதாட்டியை கத்தியால் வெட்டிய இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில் 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே நரிக்குறவ மூதாட்டியை கத்தியால் வெட்டிய இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில் 2 பேர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டுமேடு பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி கன்னியம்மாள் வ(60).
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ரஜினி, விஜய் ஆகிய இரு வாலிபர்களும் அங்குள்ள சிறுவர்கள் சிலருக்கு மது அருந்த வற்புறுத்தி உள்ளனர்.
இதனை கண்ட கன்னியம்மாள் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரையும் அழைத்து கண்டித்து அனுப்பி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் இருவரும் மது போதையில் கத்தி மற்றும் இரும்பு ஆயுதத்தால் மூதாட்டியை சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மூதாட்டியை உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் 14 தையல்கள் போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மூதாட்டியை தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் நரிக்குறவ இன மக்கள் என்பதால் போலீசார் புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வதாக உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் சுங்குவார்சத்திரம் போலிசார் தலைமறைவாக இருந்த மூதாட்டி கன்னியம்மாளை தாக்கிய அதே நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குண்டுமேடு பகுதியில் வசித்து வரும் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நரிக்குறவர் மக்களின் வீட்டுக்கும் அவர்களின் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்து வரும் நிலையில் கன்னியம்மாள் பாட்டியை தாக்கிய இருவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சுங்குவார்சத்திரம் போலிசார் அலட்சியமாக இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் காவல்துறை தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
No comments
Thank you for your comments