Breaking News

ஓராண்டு சாதனையில் வேதனை.... மகளிர் கட்டட பணி செய்த ஊராட்சி தலைவர் மீது வழக்கு- கொந்தளிப்பில் கிராம மக்கள்

ராமநாதபுரம் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓராண்டு சாதணையாக உள்ளாட்சியில் நல்லாட்சி செய்த தலைவர் மீது பொய் வழக்கு பதிவு. ஊராட்சி மகளிர் குழு கட்டட பணி நிறுத்தி வைத்து சாதனை. ஊராட்சி மக்கள் கொந்தளித்து உள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் தொருவளூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்ட அரசிடமிருந்து முறைப்படி உத்தரவு கிடைக்கப் பெற்றது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கட்டிடம் கட்டுவதற்காக ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு மேற்படி கட்டிடத்திற்கான மணலை பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விண்ணப்பத்தில் கடந்த 23.12.2020 செயல்முறை ஆணைகள் படி கட்டிடத்திற்கு நோக்கி ஓர் அணியில் இருந்து எடுத்துக் கொள்ள வழிவகை செய்தார். 



இதன்படி கட்டிடம் தேவை படுவதற்கு தேவையான மணலை மேற்படி இடத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்னரே தேவையான அளவு எடுக்கப்பட்டு கட்டிடம் கட்ட இடத்தில் பாதுகாக்க வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குவிக்கப்பட்டிருந்த மணலை காரணம் காண்பித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து உண்மைக்குப் புறம்பாக கடந்த 26.4.2022 தேதியன்று மணல் கடத்தப்பட்டதாக ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். 

மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்கனவே உத்தரவிட்டு அதன்படி சேகரிக்கப்பட்ட மணலை திட்டமிட்டு சிலரின் தூண்டுதலால் இப்படி ஒரு தவறான பொய் வழக்கை பதிவு செய்துள்ளனர்.

ஊராட்சி நலன்கருதி செயல்படும் ஊராட்சித் தலைவர் பஜ்ருதின் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஊராட்சியில் வசிக்கும் ஒட்டுமொத்த பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் வழக்கு பதிவை ரத்து செய்ய குரல் எழுப்பினர். அத்துடன் ஊராட்சி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் அலுவலகத்தில் திரளாக சென்று உண்மையை விளக்கி கூறியும் உண்மைக்குப் புறம்பாக பொய் வழக்கு நீடிக்கிறது. இது பொதுமக்களின் வெறுப்பாகவே அனைவராலும் காணப்படுகிறது.

ஓராண்டு சாதனையில் எத்தனையோ நலத்திட்டங்கள் நடைபெற்றது தொருவளூர் ஊராட்சியில் நடைபெற்ற திட்டங்களும் அடங்கும். கையில் உண்மைக்கு புறம்பாக பொய்யான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரும் வருவாய் துறையினரும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். 

இதுகுறித்து ஊராட்சி விஏஓ ஏற்கனவே தெளிவாக பொதுமக்களிடம் மணல் குறித்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது அவரையே சாட்சியாக வைத்து உண்மைக்கு புறம்பாக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலை நீடிக்கப்படும் பட்சத்தில் அரசுக்கு மக்கள் மேல் உள்ள நம்பிக்கை குறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

No comments

Thank you for your comments