Breaking News

24 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு (ITI) ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் நன்கொடை..

தமிழ்நாட்டில் உள்ள 24 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு (ITI) ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் வெட்டு தோற்றம் பொருந்திய இஞ்சின்கள் நன்கொடையாக வழங்கியது.

💧        அரசு கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பிற்கு உதவுதல் மற்றும் செய்முறை பயிற்சி மூலம் மாணவர்களை பணிக்குத் தேவையான திறன் பெறச் செய்தலே நோக்கம்

💧         அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 12,000 மாணவர்கள் பயன்பெறுவர்

காஞ்சிபுரம், மே 6, 2022: ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூக சேவை பிரிவாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள 24 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு (ITI), மாணவர்களின் பணியாற்றக்கூடிய திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெட்டு தோற்றம் பொருந்திய இஞ்சின்களை இன்று நன்கொடையாக வழங்கியது. 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர் திரு. கணேஷ் மணி S அவர்கள், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு. R கிர்லோஷ் குமார் IAS அவர்களிடம் வழங்கினார். அப்பொழுது, T.ராஜசேகர், கூடுதல் இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர் திரு. T சரவணன் மற்றும் 24 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களும் உடன் இருந்தனர்.



 இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர் திரு. கணேஷ் மணி S அவர்கள், “திறன்மிக்க பணியாளர்கள் தேவையை மனதில்கொண்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுடன் இணைந்து, நவீன உள்கட்டமைப்புகளை வழங்கி, மாணவர்களுக்கு தொழில்துறைக்குத் தேவைப்படும் திறனை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ மற்றும் ‘போக்குவரத்திற்கும் அப்பால்’ எனும் ஹூண்டாயின் கொள்கைகளின்படி, நவீன பணியிடங்களுக்குப் பொருத்தமான தொழில்துறை திறமைகளை இளைஞர்களுக்கு வழங்கும் அரசின் குறிக்கோளுடன் நாம் ஒத்திசைந்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில், மோட்டார் மெக்கானிக் கல்வி பயிலும் சுமார் 12,000 மாணவர்கள் இன்ஜின் தொழில்நுட்பத்தில் செயல்முறை அனுபவத்தைப் பெறுவார்கள்,” என்றார்.

 திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, HMIF, இந்தியாவில் உள்ள 47 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளுடன் உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வித்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உதவும் நோக்கில் கைகோர்த்துள்ளது. 

வருடத்திற்கு சராசரியாக, 500க்கும் அதிகமான மாணவர்கள் இந்தியாவெங்கும் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

 இது மட்டுமின்றி, அரசின் பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சி திட்டத்திலும் பங்குவகிக்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், உளுந்தூர்பேட்டை மற்றும் ராணிபேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 2008ம் ஆண்டில் இருந்து உதவி வருகிறது. 

ஹூண்டாய் நிறுவனத்தின் உதவிகளின் மூலம், இந்த தொழிற்பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு மாதிரி ITIகளாக உருவெடுத்துள்ளன. 2018ம் ஆண்டு, உளுந்தூர்பேட்டை ITI இந்திய அளவில் 10வது தரவரிசையையும், தமிழ்நாடு அளவில் 5வது தரவரிசையையும் பிடித்தது.  

HMIF- ஒரு அறிமுகம்: 

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகள் வழங்கும் நிறுவனம் மற்றும் பெரும் ஏற்றுமதி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூக சேவை பிரிவாக செயல்பட உருவாக்கப்பட்டதுதான் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) ஆகும். சமூக மேம்பாடு, ஆரோக்கியம், கல்வி, தொழில்கல்வி பயிற்சி, சாலை பாதுகாப்பு, கலை, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தனது பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாடுகள் மூலம் பங்களிப்பை வழங்கும் நோக்கத்துடன் 2006ம் ஆண்டில் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. 

சமூகத்தின் நலிந்த பிரிவினரின் வாழ்வை மேம்படுத்த ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் ஆதரவுடன் நாட்டில் நிலைப்புத்தன்மை மிக்க அனைவருக்குமான மேம்பாட்டு செயல்பாடுகளை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டு வருகிறது. 

‘மானுடத்திற்கான முன்னேற்றம்’ எனும் தனது உலகளாவிய கொள்கையின் அடிப்படையில் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மையான நிறுவனமாக ஹூண்டாய் இருந்து வருகிறது. 

கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமங்களையும் சென்றடையும் ‘ஸ்பர்ஷ் சஞ்சீவனி’ எனும் மருத்துவ சேவை, ‘சாக்ஷம்’ எனும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி, #BeTheBetterGuy எனும் சாலை பாதுகாப்பு பிரச்சாரம், Art for Hope, H-Social Creator, கொரோனா நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவிக்கரம், ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவல், வெண்டிலேட்டர் தயாரிப்பு, முகக்கவசம் வினியோகம், கோவிட்-19 போராளிகளின் குழந்தைகளுக்கு கையடக்க கணினி வழங்கி அவர்களது கல்வியில் உதவிக்கரம், பள்ளிகள் புனரமைப்பு, கொரோனா பாதிப்பு பெருமளவு நிலவிய காலகட்டங்களில் நாடெங்கும் உள்ள நலிந்த பிரிவினருக்கும், நமது தொழிற்சாலை வளாகத்திலும் மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் வினியோகம் செய்தல் ஆகியன ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF)ன் குறிப்பிடத்தக்க சேவைப்பணிகள் ஆகும்.

 


No comments

Thank you for your comments