வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக செய்தியாளர்கள் சுற்றுப்பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா அவர்களின் தலைமையில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான செய்தியாளர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா அவர்களின் தலைமையில் இன்று (12.05.2022) வேளாண்மை (ம) உழவர் நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்ட வளர்ச்சி பணிகளை செய்தியாளர்கள் மற்றும் ஊடக குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் சூரிய மின்வேலி, சூரிய கூடார உலர்த்தி, மரச்செக்கு இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம். நுன்னீர்ப்பாசன அமைப்புகள், நிலத்தடி நீர் ஆய்வு பண்ணைக்குட்டை சூரிய மின் மோட்டார். வேளாண் கருவிகள் வாடகைத் திட்டம், பழுதான மின்மோட்டார் புதுப்பித்தல் திட்டம், துணை வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 2021-2022 ஆம் நிதியாண்டில் முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் (5HP, 7.5HP) அமைக்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.10.43/ இலட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விஷார் பகுதியில் திரு.ஜெயவேல் விவசாயிக்கு சொந்தமான இடத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அரசின் 70 சதவீத மானியத்துடன் 5 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுப்பயணத்தில் பார்வையிட்டு இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டபொழுது அவர் தெரிவித்ததாவது இத்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் மின்சார செலவு இல்லாமல் நிறைவான சாகுபடி பணிகள் செய்து அதிக மகசூல் பெற முடிகிறது.
சூரிய மின்வேலி அமைக்கும் திட்டத்தில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.65/ இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. முசரவாக்கம் பகுதியில் திரு.அரசு விவசாயிக்கு சொந்தமான இடத்தில் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டபொழுது அவர் தெரிவித்ததாவது. காட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகளிடமிருந்து விவசாயப் பயிர்களை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெற முடிகிறது.
தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்கலை மலபயிர்களின் நீர்ப்பாசனத்திற்கும் சொட்டு நீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதில் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு மொத்த விலையில் 90 சதவீதம் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்துடன் வழங்கப்படுகிறது.
தாமல் பகுதியில் திருமதி.பூங்குழலி விவசாயிக்கு சொந்தமான பழ மரங்களின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசன திட்டத்தை இச்சுற்றுப்பயணத்தில் பார்வையிடப்பட்டது இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டபொழுது அவர் தெரிவித்ததாவது. பயிர்களுக்கு பாசன நீர் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள் தடுக்கப்படுகிறது. சாதாரண பாசன முறையில் பாய்ச்சும் நிலப்பரப்பை விட இரண்டரை முதல் மூன்று மடங்கு நிலத்திற்கு கூடுதலாக நீர் பாய்ச்ச முடியும். பயிர்களுக்கு சீரான நீர் மற்றும் உரம் கிடைப்பதால் முறையான வளர்ச்சியும், சீரான முதிர்ச்சியும் கிடைக்கும்.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திரு.ரகு விவசாயிக்கு அறுவடைக்குப்பின் நிலக்கடலை, தேங்காய், எள்ளு போன்ற விலை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பதற்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் மூலம் மானியத்தில் மரச்செக்கு எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சுற்றுப்பயணத்தில் பார்வையிட்டு இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டபொழுது அவர் தெரிவித்ததாவது.
எனது விலை பொருட்களையும் மற்ற விவசாயிகளின் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி அதிக லாபம் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது, மேலும் எனது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள இத்திட்டம் உறுதுணையாக உள்ளது .
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சியில் தூய்மை பாரத் இயக்கம் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டு இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் ரூ.21.399 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இதில் 14 தொட்டிகள் 0.7 மெட்ரிக் டன் கொள்ளவில் கட்டப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பையானது மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்டு நாள்தோறும் தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.
தண்ணீருடன் தயிர், வெல்லம், தவிடு. உமி கலந்து EM Solution தயாரிக்கப்படுகிறது. இந்த EM Solution 7 நாட்கள் புளிக்க வைத்து உருண்டைகளாக பிடித்து நாள்தோறும் தொட்டிகளில் விரைவில் மக்குவதற்காக கலந்துவிடப்படுகிறது. இவ்வாறாக 42 நாட்கள் மக்கிய உரங்கள் வெளியில் எடுத்து உலர வைத்து சலித்து உரங்கள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறாக தயாரிக்கப்படும் உரங்கள் கிலோ மற்றும் 1.50 பாக்கெட்டுகளாக நிரப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை 700 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு 326 கிலோ உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள 5 தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் செய்து வருகின்றனர்.
இச்சுற்றுப்பயணத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை திரு.கணேசன், செயற்பொறியாளர் திரு.அருன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கணேசன், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கலந்து கொண்டனர்
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments