Breaking News

வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

 காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக அரங்கில் குழுவின் தலைவரும் நமது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான க. செல்வம்,M.Com.,M.Phil.,LLB அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சி நாடாளுமன்ற குழுத் தலைவரும், இக்குழுவின் இணைத் தலைவரும் திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான T R பாலு, அவர்கள் மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ததாமோ அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இராகுல்நாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், திட்ட இயக்குனர் செல்வக்குமார், ஆகியோருடன்  நடைப்பெற்றது. 

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  செம்பருத்தி, தாம்பரம் மேயர்  வசந்தகுமாரி, நகரமன்ற தலைவர்கள்  சண்முகம், MKD.கார்த்திக் ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் RT.அரசு, SRL.இதயவர்மன், கண்ணன்,  ஏழுமலை,   சுபலட்சுமிபாபு, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறைகளின் அலுவலர்கள் கலந்நு கொண்டனர்.


இந்நிகழ்வில் மக்களுக்கான பணிகள் தோய்வின்றி துரிதமாக நடைப்பெற வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. மக்களுக்கான நலத்திட்டங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வாயிலாகவும், உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாயிலாகவும் எளிதில் விரைவில் சென்றடைய வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

No comments

Thank you for your comments