நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிக்கு 72 நாட்கள் சிறை
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்நிலையில் மேற்படி, பரத் ( 27 ) த / பெ.வேலு, நன்னடத்தை பிணையை மீறி 19.04.22 அன்று எதிரி தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் கூட்டுக்கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது சம்பந்தமாக 19.04.22 அன்று சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
எனவே, மேற்படி நபர் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 72 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிவகாஞ்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
No comments
Thank you for your comments