Breaking News

நன்னடத்தை பிணையை மீறிய 2 குற்றவாளிகளுக்கு சிறை... சிறப்பாக செயல்பட்ட காவல் குழுவினருக்கு பாராட்டு

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். 


இதன்படி சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் அவரின் பரிந்துரையின்பேரில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளான 

1 )கோபி ( எ ) கோழி கோபி ( 33 ) த / பெ.மணி, பல்லவர்மேடு கிழக்கு, காஞ்சிபுரம் மற்றும் 

2 ) ஹரிபாபு ( 24 ) த /பெ.வேணுகோபால், எம்.ஜி.ஆர் நகர், தாயார்குளம், காஞ்சிபுரம் மாவட்டம் 

என்பவரை சட்டப்பிரிவு 110 குவிமுச - வின் படி ஒரு ஆண்டிற்கு நன்னடத்தை பிணையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் ஆணை பிறப்பித்தார். 

நெ.123 / 83 இந்நிலையில் மேற்படி,  1 ) கோபி ( எ ) கோழி கோபி ( 33 ) த / பெ.மணி மற்றும் 2 ) ஹரிபாபு ( 24 ) த/பெ.வேணுகோபால், ஆகிய இருவரும் நன்னடத்தை பிணையை மீறி 13.04.22 அன்று ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் வேலைசெய்யும் ராஜன் ( 36 ) த / பெ.முனுசாமி, ராயன்குட்டை தெரு, காஞ்சிபுரம் என்பவரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக 13.04.22 அன்று சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 

எனவே, மேற்படி நபர்கள் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக கோபி ( எ ) கோழிகோபியை 69 நாட்களும் மற்றும் ஹரிபாபுவை 220 நாட்களும் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார் . 

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிவகாஞ்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments

Thank you for your comments