காஞ்சியில் 5ம் நாள் உற்சவம்..தங்கபல்லக்கில் மோகினி திருக்கோலம்.. வீதி உலா
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 5ம் நாள் உற்சவம்.
தங்கபல்லக்கில் மோகினி திருக்கோலத்தில் தங்கத்தால் அலங்கரிக்க பட்ட ஜடை அணிந்து வீதி உலா வந்த வரதராஜ பெருமாள். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
5-ம் நாள் காலை உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாள் நீளம் நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கபட்ட ஜடை அணிந்து பஞ்சவர்ண மலர் மாலைகள் சூடி தங்கபல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பாலித்தபடி பாதம் தாங்கிகள் தூக்கி வர காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
தங்கபல்லக்கில் மோகினி திருக்கோலத்தில் தங்கத்தால் அலங்கரிக்க பட்ட ஜடை அணிந்து திருக்கோலத்தில் வலம் வந்த வரதராஜப் பெருமாளை வழி நெடுகிலும் வீதிகளில் பெரும் திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்து வணங்கிச் சென்றனர்.
No comments
Thank you for your comments