காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.10.09 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.10.09 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றிகளை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, காஞ்சிபுரம் மாநகராட்சி, 7-வது வட்டம் (பகதூர்கான்பேட்டை) மற்றும் 20-வது வட்டம் (ரெட்டிப்பேட்டை) பகுதிகளில் 100KVA திறன் கொண்ட புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாணவர் அணிச் செயலாளருமான திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் நகரச் செயலாளர் திரு. சன்பிராண்ட் கே.ஆறுமுகம், நகர பொருளாளர் திரு.சு.வெங்கடேசன், மண்டல குழுத் தலைவர் திரு.எஸ்.சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா இராமச்சந்திரன், ப. சுரேஷ், வ.கமலக்கண்ணன், எஸ்.சர்மிளா, எஸ்.கௌதமி, முருகன் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் திரு. ஏ.எஸ் முத்துசெல்வம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. யுவராஜ், பி.எஸ்.குடியரசு உள்ளிட்ட நகர கழக நிர்வாகிகள், மின்சாரத்துறை அலுவலர்களான மேற்பார்வை பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் வடக்கு சரவணதங்கம், உதவி செயற் பொறியாளர் இளையராஜன், உதவி பொறியாளர் கிள்ளிவளவன், சோழராஜன், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments