ஊராட்சி குழு துணைத்தலைவர் நிதியா சுகுமார் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம் :
மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நிதியா சுகுமார் தலைமையில் மே.1 சிறப்பு கிராம சபை கூட்டம் முட்டவாக்கம் தாமல் சிறுனை கிழ்அம்பி ஊராட்சியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கிராமபுற ஊராட்சிகளில் மே.1.உழைப்பாளர்தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட முட்டவாக்கம் தாமல் சிறுனைஆகிய கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நித்யா சுகுமார் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
ஊராட்சி சார்ந்த பகுதிகளில் பள்ளி குழந்தைகளுக்கு கழிப்பிட வசதி புதிய கட்டிடம் ஏற்படுத்திக் கொடுத்து பகுதிநேரமாக செயல்படும் ரேஷன் கடையில் முழு நேரமாக செயல்படுத்த வேண்டும் புதிய ரேஷன் கடை கட்டிடம் அமைத்து தர வேண்டும்
24மணிநேரமும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் ஊராட்சி சார்ந்த பகுதி மக்களுக்குகிடைக்கும் 40 வருடத்திற்க்கு மேல் பழமை வாய்ந்த நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து காணப்படுவதால் புதிதாக நீர்தேக்க தொட்டி அமைத்துத் தரப்பட வேண்டும் எனவும் முக்கிய விதிகளில்சிசிடிவி கேமரா பார்த்து தரப்படும் என பத்துக்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நிகழ்ச்சியின்போது உடன் முட்டவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சுரேஷ் ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி மனேகரன் சிறுனை தலைவர் குனபூசனம் துணைத்தலைவர் ராமதாஸ் கிழம்பி தலைவர் மகாலட்சுமி ராஜசேகர் துனனத்தலைவர் திவ்யாஹின்டரி கவுன்சிலர் விமல் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments