Breaking News

வாலாஜாபாத் அடுத்த பூதேரியில் 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள பூதேரி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நில தானக் கல்வெட்டு வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத் தினர் கண்டுபிடித்துள்ளனர்.

வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் அது பற்றி தெரிவித்ததாவது,  

வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் இப்பகுதிகளில் உள்ள வரலாற்று ஆவணங்களை வெளிக்கொணரவும், ஏற்கனவே உள்ள வரலாற்றுச் சின்னங்களின் அருமைகளை மக்களுக்கு தெரிவிக்கவும் தொடார்ந்து செயல்பட்டு வருகிறது.

 அவ்வகையில் வாலாஜாபாத் அடுத்த பூதேரி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த தகவலின் பேரில் பூதேரி-யில் உள்ள கல்வெட்டை  ஆய்வு செய்யப்பட்டது.  

சீயபுரம் என அழைக்கப்பட்ட  (பழையசீவரம்) பகுதியை சேர்ந்த சேந்தன் என்பவர் தான் கட்டிய கோவிலுக்கு ஊராரிடம் 8 மா நிலம் (3.5மா = 1 ஏக்கர்) ஒப்படைத்துள்ளார்.  அந்த நிலத்திற்கு வடகழனி என பெயரிட்டு அழைக்கப்ட்டுள்ளது. அங்குள்ள பூதேரி ஏரியை இக்கல்வெட்டு நாயனார் ஏரி என குறிப்பிடுகிறது. 

இவ்வேரிக்கு நீர்க்கொண்டு வரும் கால்வாயை  சிறுகால் என்றும், இந்த நிலத்திற்கான வரி மற்றும் நீர்வரி நீக்கிய செய்தியும் இடம்பெற்றுள்ளது.  மேலும் இக்கிராமத்தினர் அம்பலத்திற்கு (கோயில்) ஒதுக்கிய அந்நிலத்திற்கு நீர் வரி பெறமாட்டோம் என உறுதியளித்த தகவலும், இந்த அம்பல நிலத்திற்கு நீர் பாயும் போது கிராமத்தின் முக்கிய வாய்க்காலான நடுமடையில் இருந்து நீர் திறப்பதில்லை எனவும் ஊரார் உறுதியளித்த செய்தியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இக்கல்வெட்டானது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்கததாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  இக்கல்வெட்டை அண்ணன்மார் தெய்வம் மஞ்சள் குங்கும மிட்டு  சிலர் வணங்கியும் வருகின்றனர்.

தொல்லியல் துறை உதவி கல்வெட்டாளர் நாகராஜன், உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ்,  பிரசன்னா ஆகியோரும் இக் கல்வெட்டு செய்தியை உறுதி செய்தனர்.  இக்கள ஆய்விற்கு ஆய்வு மைய நிர்மல்குமார், கோகுல் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

No comments

Thank you for your comments