Breaking News

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு... பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்.

தமிழ்நாடு முதலமைச்சர் -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலவராக ஓராண்டு நிறைவு பெற்றாதையொட்டி உத்தீரமேரூரில் திமுகவினர் கொண்டாட்டம்.


தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவரும்மான மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பொறுப்பை ஏற்று  ஓராண்டு நிறைவு பெற்று பல நூறு சாதனைகளை படைத்து திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருவதையொட்டி ஆங்காங்கே திமுகவினர் நலதிட்ட உதவிகள் வழங்கி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய திமுக செயலர் ஞானசேகரன் மற்றும் பேரூர் செயலர் பாரிவள்ளல் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.



இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணை தலைவர் இளமதி கோவிந்தராஜன், ஏழுமலை, சுந்தரராஜன், யுவராஜ், பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments