100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடகல் கிராமத்தில் அமையவுள்ள 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனைக்கு மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் மற்றும் மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடகல் கிராமத்தில் அமையவுள்ள 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனைக்கு மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் மற்றும் மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி ஆகியோர் இன்று (22.05.2022) அடிக்கல் நாட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் அவர்கள் தெரிவித்ததாவது:
உலகமெங்கிலும் உள்ள முற்போக்கான அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்ட சமூக பாதுகாப்பு நடவடிக்கையாக 1952-ல் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் நிறுவப்பட்டது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் காயமடைந்த மற்றும் உடல்நலம் குறைந்த காப்பீட்டாளர்களுக்கு போதிய மருத்துவ வசதி அளிப்பதில் முன்னிலையில் உள்ளது. தற்சமயம் 3.39 கோடி தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சமூக பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் 13 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.
ரூ.21,000/- வரை சம்பளம் பெறும் அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். தற்பொழுது மொத்தமுள்ள 740 மாவட்டங்களில் 566 மாவட்டங்களுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் முதன் முதலில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 23.01.1955 அன்றும், அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1955-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் பிற தொழில் மையங்களில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டது. தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட அனைத்து முக்கிய தொழில்துறை மையங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் முழுமையாகவும் 16 மாவட்டங்கள் பகுதியாகவும் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் சுமார் 38,26,600 காப்பீட்டாளர்கள் மற்றும் 1,48,47,210 பயனாளிகள் இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். இ.எஸ்.ஐ.சி. அதன் இரண்டு இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகள், 8 இ.எஸ்.ஐ.எஸ்.மருத்துவமனைகள், 225 மருந்தகங்கள், 1 EUD, மற்றும் 1 MEUD மூலம் மருத்துவ சேவைகள் வழங்குகிறது. மேலும் இதன் மண்டல அலுவலகம், 4 துணை மண்டல அலுவலகங்கள், 75 கிளை அலுவலகங்கள் மற்றும் ஒரு மருந்தகத்துடன் கூடிய கிளை அலுவலகம் மூலம் தங்களுடைய காப்பீட்டாளர்களுக்கு நிர்வாக சேவைகள் மற்றும் பணப் பயன்களை வழங்குகிறது.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வல்லம் வடகல் கிராமத்தில் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை 5.12 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூபாய் 155 கோடி செலவில் அமையவுள்ளது. முக்கியமாக சிப்காட் கிரீம்ஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனை பயனாளிகளுக்கு எளிதாக அணுகும் வகையில் இருக்கும். இந்த மருத்துவமனையில் விபத்து பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், மக்கள் மருந்தகம், கதிரியக்கவியல், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், எலும்பு சிகிச்சை, பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மற்றும் உள் நோயாளிகள் பிரிவு போன்ற அனைத்து அதிநவீன சேவைகளும் அமைய உள்ளது. இந்த 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையில் திருப்பெரும்புதூர், பூந்தமல்லி, திருமுடிவாக்கம், ஓரகடம், படப்பை மற்றும் காஞ்சிபுரம் போன்ற அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த எட்டு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைவர் என மாண்புமிகு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. தலைமை நிர்வாக இயக்குநர் திரு.முக்மேத் பாட்யா, இ.ஆ.ப., இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் கூடுதல் செயலாளர் டாக்டர்.ஷஷாங்க் கோயல், தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு செயலாளர் திரு.ஆர்.கிரிலோஷ் குமார், முதன்மை தொழிலாளர் ஆணையர் திரு.அதுல்யா ஆனந்த், இ.ஆ., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments