Breaking News

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உயிர் காக்கும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உயிர் காக்கும் உன்னத சேவையாக இரத்ததான முகாம் நடைபெற்றுது.

22-05-2022 ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) காஞ்சிபுரம் கிளை மற்றும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து நடத்திய 31-வது மாபெரும் இரத்ததான முகாம் கிளை தலைவர் முஜிபுர் ரஹ்மான்,செயலாளர் அப்துல்லாஹ், பொருளாளர் ஃபாசில் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலையில் ஒலிமுஹம்மதுபேட்டை TNTJ தவ்ஹீத் பள்ளிவாசலில்  நடைபெற்றது.

இரத்த பற்றாக்குறை காரணமாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உரிய நேரத்தில்  100க்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு சாதி மத பேதமின்றி இரத்ததானம் வழங்கி மனித உயிர் காக்க தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

இந்நிகழ்வில் இரத்த வங்கி அலுவலர் முஹம்மது ஃபர்ஹான் உடனிருந்தார் மேலும் இரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

No comments

Thank you for your comments