நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஐம்பெரும்விழா ஆலோசனை கூட்டம்
சேலம், மே 22-
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தலைமையில் மாநில-மண்டல நிர்வாகக் குழுவினர் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி நிரல் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் சேலத்தில் இன்று (22-05-2022) நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற உள்ள நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் 5-ம் ஆண்டு விழா மற்றும் செய்தியாளர்கள் நலத்திட்டம், கல்வி உதவி தொகை வழங்குவது உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், வெல்கம் பவுண்டேஷன் சார்பில் சமூக சேவகர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களது சேவைகளை போற்றும் விதமாக சமூக சேவகர் விருது, சாதணையாளர்களை சமூகத்தில் அடையாளபடுத்தி உரிய அங்கீகாரம் வழங்குவதற்காக சாதணையாளர்கள் விருது மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட ஐம்பெரும் விழவாக நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் வெல்கம் பவுண்டேஷன் இணைந்து நடத்துகிறது.
ஐம்பெரும் விழா சிறப்பாக நடத்துவது குறித்து நிர்வாகக்குழுவினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தலைமையில், துணைத்தலைவர் ஜி.கே.குமார் மற்றும் இணைச்செயலாளர் சி.கே. ராஜன் முன்னிலையில், மேற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் ஐம்பெரும் விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பத்திரிகையாளர் பாதுகாப்பு, அரசு நலத்திட்டங்கள் உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் சங்க செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சி இறுதியில் சேலம் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர் அடையாள அட்டையை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வழங்கினார்.
No comments
Thank you for your comments