Breaking News

மத்திய அரசின் பண்டிட் தீனதயாள் உபாத்தியா தேசிய நல நிதி (PDUNWFS) திட்டம்... விண்ணங்கள் வேற்பு...

தருமபுரி:

நலிந்த/ஆதரவற்ற நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் பண்டிட் தீனதயாள் உபாத்தியா தேசிய நல நிதி (PDUNWFS) திட்டம் வாயிலாக பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு, பதக்கங்களைப் பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட) / ஆதரவற்ற நிலையில் வாழும் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக பண்டிட் தீனதயாள் உபாத்தியா தேசிய நல நிதி (PDUNWFS) திட்டத்தினை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ்கண்ட நோக்கங்களுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

1.  ஆதரவற்ற நிலையில் வாழும் விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவி.

2. விளையாட்டுப் பயிற்சிகள், போட்டிகளின்போது காயமடைந்த வீரர்களுக்கான நிதியுதவி.

3. விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ உதவி.

4. வறுமையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்பத்தை போக்குவதற்கான தகுந்த நல உதவிகள்.

5. வறுமையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி, விளையாட்டுக் கருவிகள் வாங்க மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுந்த நிதியுதவி.

6. பொதுக்குழுவால் பொருத்தமானதாக கருதப்படும் இதர நோக்கங்களுக்கான நிதியுதவி.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற விருப்பம் உள்ள வறுமையில் வாடும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர விபரங்களை தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இது அனைத்து மாவட்டத்தினருக்கும் பொருந்தும்...

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://yas.gov.in/


No comments

Thank you for your comments