அரூரில் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி
அரூர்:
அரூரில் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு இன்று தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம்.
இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெறுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஓலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளை கடைபிடித்தனர்.
இதனையொட்டி இன்று காலை ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளை ஏந்திய வண்ணம் பாடல்கள் பாடி கிறிஸ்தவர்கள் பவனியாக செல்வார்கள்.
கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறவில்லை.
இந்த ஆண்டு தொற்று முற்றிலும் குறைந்து கட்டுக்குள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சிறப்பாக அனுசரிக்கிறார்கள்
கத்தோலிக்க திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகு சிறப்பாக நடைபெறும்.
இதே போல அரூரில் தூய இருதய ஆண்டவர் பங்குத்தந்தை அவர்களின் தலைமையின் கீழ்
சந்தைமேடு பகுதியிலிருந்து கடைவீதி பேருந்து நிலையம் மொரப்பூர்.தருமபுரி நெடுஞ்சாலை வழியாக குருத்தோலை ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்று ஆலயத்தில் பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குருத்தோலை பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
14ம்தேதி தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு தனது சீடர்களுடன் போஜனம் பண்ணுவார். சீடரின் கால்களை கழுவுவார், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சாதாரண மனிதரின் காலை கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து 15ம்தேதி தேதி புனித வெள்ளி எனப்படும் பெரிய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
அன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லப்படும் நிகழ்வை சித்தரிக்கும் வகையில் மும்மணி தியான ஆராதனை ஆலயங்களில் நடைபெறும்.
அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுதல் பண்டிகை ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.
No comments
Thank you for your comments