உத்திரமேரூரில் ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆனந்தவள்ளி சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 10 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
துவங்கிய நாள் முதல் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து 3 ஆம் நாளானன்று ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து 7 ஆம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ.சுந்தர வரதராஜர் திருதேரில் அமர தோரோட்டமானது துவங்கியது.
தேரடி வீதியில் துவங்கிய தேரோட்டம் சின்ன நாராசம் பேட்டைத் தெரு, திருமலையா பிள்ளைத் தெரு, பஜார் வீதி, ராயர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார், பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து கோவிந்தா, கோவிந்தா என்று முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் உத்திரமேரூர் போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியினைக்கான உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)

No comments
Thank you for your comments