Breaking News

சுதந்திரா இயக்கம் சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா. ...

தமிழ் புத்தாண்டு அன்று சுதந்திரா  இயக்கத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா, சேலம் குகை பகுதியில் அமைந்துள்ள சுதந்திர இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சுதந்திர இயக்கத்தின் மாநில கல்விப்பிரிவு செயலாளர் முத்துமாராயன்  தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் செல்வி  மீனா வரவேற்றுப் பேசினார். சுதந்திர இயக்கத்தின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர்  சாந்தி மற்றும் கல்வி பிரிவின் ஆலோசகர் சீனி மணிவண்ணன்  வாழ்த்துரை வழங்கினார்கள்.

அம்மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு செயலாளர் செந்தமிழ் தேனி செந்தில்குமார் சிறப்புரையாற்றினார்.

திருக்குறள் 1330 குறட்பாக்களை 60 நிமிடத்தில் ஒப்புவித்து சாதனை புரிந்த நாமக்கல் மாவட்டம் காவேட்டி பட்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் அனன்யா என்ற மாணவிக்கு சுதந்திர திருக்குறள் செல்வி விருது 1330 குறட்பாக்களை விரைவு தகவல் குறியீட்டில் (க்யூ ஆர் கோட்) திருவள்ளுவர் உருவத்தில் வடிவமைத்து சாதனை புரிந்த மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி  வி.ச.நிதர்சனாவுக்கு சுதந்திர திருக்குறள் செல்வி விருது திருக்குறள் 133 அதிகாரங்களை கவிதை வடிவில் புத்தகமாக திருக்குறள் கவிதைகள் என்ற நூலை எழுதி சாதனை புரிந்த  மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்  சே மதுரம் ராஜ்குமார் என்ற  மாணவனுக்கு சுதந்திரா  இலக்கிய விஞ்ஞானி விருது 275க்கும் மேற்பட்ட மேடைகளில் நடன அரங்கேற்றம் செய்து சாதனை புரிந்த மேட்டூர் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்  ம. மோனிஷ்  என்ற மாணவனுக்கு சுதந்திர இளம் கலைஞானி விருதையும் சுதந்திர இயக்கத்தின் நிறுவனரும் மாநில தலைவருமான காமராஜ் வழங்கினார். 

மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ரவிச்சந்திரன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சுதந்திரா  இயக்கத்தின் துணைச் செயலாளர் ஐயன்துரை  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சுதந்திரா  இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

No comments

Thank you for your comments