Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீராஜகுபேரன் கோயிலில் மகா ராஜகுபேர யாகம்



காஞ்சிபுரம் :

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜகுபேரன் கோயிலில் மூலிகைகளைக் கொண்டு மக்கள் செல்வச் செழிப்பு அடைவதற்காக மகா ராஜகுபேர யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குபேரப்பட்டிணத்தில் வைத்தியநாத சுவாமி உடனமர்ந்த ராஜகுபேரன் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மக்களிடையே செல்வச் செழிப்பு, வெற்றி, ஆரோக்கியம் நிறைந்திருப்பதற்காக 108 சிறப்பு மூலிகைகளைக் கொண்டு மகா ராஜகுபேர யாகம் நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. மூலவர் ராஜகுபேரன் தங்க அட்சய பாத்திரத்தை கையில் வைத்திருந்த நிலையில், நெல்லிக்காய் மாலையுடன், தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.



இசைத்தட்டு வெளியீட்டு விழா

ராஜகுபேர சுவாமியின் வரலாறுகளை விளக்கும் பாடல்களை ராஜகுபேர சித்தர் சுவாமிகளே எழுதி பாடிய இசைத்தட்டு வெளியீட்டு விழா ஆலயத்தின் முன்பாக நடைபெற்றது. 

தொழிலதிபர் டி.வி.மோட்டார்ஸ் சுரேஷ் அதை வெளியிட இசைத்தட்டினை திரைப்பட இயக்குநர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். 

இந்தவிழாவில் மின்மிணி குழுமங்களின் தலைவர் ஜி.சரவணக்குமார், தொழிலதிபர்கள்  ஜி.எஸ்.ஞானசுந்தரம், சி,கிருஷ்ணன், திருவேங்கடம், பணி ஓய்வு பெற்ற மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட பலரும் விழாவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராஜகுபேர சித்தர் பீடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

No comments

Thank you for your comments