Breaking News

கோவைக்கு ட்ரோன் போலீஸ் பிரிவு

கோவை, ஏப்.20-

கோவைக்கு ட்ரோன் போலீஸ் பிரிவு செயல்பாட்டுக்கு வர உள்ளது.



கோவை மாநகர போலீசில் அதிநவீன 'ட்ரோன்' கேமராக்களுடன் கூடிய பிரத்யேக போலீஸ் பிரிவு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.அரசியல் கட்சியினர், வெவ்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டங்களின் போதும், சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள் நடக்கும்போதும், போலீசார் போட்டோ, வீடியோ எடுக்கின்றனர்.

அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் திரண்டு வரும் நேரங்களில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா  குட்டி விமானங்களில் படம் பிடிப்பது வெளிநாடுகளிலும், மும்பை, டில்லி, சென்னை போன்ற பெருநகரங்களிலும் வழக்கமாக உள்ளது.



அதேபோன்று, பிரத்யேகமாக பயிற்றுவிக்கப்பட்ட 'ட்ரோன்' போலீஸ் பிரிவு கோவையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று, மாநகர போலீஸ் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

'சென்னைக்கு அடுத்த முக்கிய நகரமான கோவையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கும், போராட்டங்களை கண்காணிப்பதற்கும், பேருதவியாக ட்ரோன் பிரிவு இருக்கும்' என்று போலீஸ் தரப்பில் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், கோவையில் அதிநவீன 'ட்ரோன்'   கேமராக்களுடன் கூடிய போலீஸ் பிரிவு ஏற்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்

No comments

Thank you for your comments